கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட சார் ஆட்சியர்

3 February 2021, 4:33 pm
Quick Share

தருமபுரி: பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தருமபுரி சார் ஆட்சியர் பிரதாப் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனோவை கட்டுப்படுத்தவும் இனி பரவமால் தடுப்பதற்கும் கொரோனோ தடுப்பூசி அனைவருக்கும் இலசமாக வழங்கப்படும் என தமிழக அரசு தொரிவித்துள்ளது. இதனையடுத்து முன்கள பணியாளார்கள் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

இன்று தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ தடுப்பூசி முகாமில் தருமபுரி சார் ஆட்சியர் பிரதாப் ஐ.ஏ.எஸ். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை தரும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதேபோல் மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தியும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Views: - 0

0

0