ஆதார் கார்டில் குளறுபடி: 39 வயது பெண்ணுக்கு 100 வயது என பதிவு: 1 ஆண்டுகளாக போராடும் பெண்
1 December 2020, 5:54 pmதருமபுரி: ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதியின் பிழையை திருத்தி தர வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி வேலை செய்து வருபவர் சின்னசாமி இவரது மனைவி சாந்தி. இவர் கடந்தாண்டு ஆதார் கார்டு எடுத்துள்ளார். அதில் பிறந்த ஆண்டு 1921 என்றும். வயது 39 வயதுக்கு பதில், 100 என்றும் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வயதை தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், இவரால் எந்த ஒரு அரசு நலதிட்டங்களை பெற முடியாத நிலையில் உள்ளார். இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை வைத்து வங்கியில் பயிற் கடன் வாங்க விண்ணப்பித்த போதும் ஆதார் அட்டையில் தவறாக உள்ளது என கூறி வங்கி கடன் தர மறுத்துள்ளனர்.
இதே போல் மகளிர் சுய உதவிக்குழுவிலும் உறுப்பினராக சேர்க்க மறுக்கிறார்கள். தவறான பதிவை திருத்த இ.சேவை மையத்தில் பல முறை முயன்றும் முடியவில்லை வயது குறித்து மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிலும் ஆதார் அட்டையில் பிழை உள்ளது என மறுக்கிறார்கள் என இந்த பிழையை மாற்ற கடந்த ஒரு ஆண்டுகளாக 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் மாற்ற முடியவில்லை என வேதனையுடன் சாந்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து எனது ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதியின் பிழையை திருத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.
0
0