கனரா வங்கி ஏடிஎம்மில் 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளை முயற்சி : சொதப்பிய பிளான்
17 November 2020, 8:45 pmதருமபுரி: அரூர் அருகே கனரா வங்கி ஏடிஎம்மில் 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம கும்பல் குறித்து எ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த மூக்காரரெட்டிப்பட்டி கிராமத்தில் கனரா வங்கி இயங்குகிறது. இந்த வங்கியின் அருகே ஏடிஎம் மையம் செயல்படுகிறது. நேற்று இரவு கனரா வங்கியின் ஏடிஎம்யில் பணம் கொள்ளையடிக்க மர்ம நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இயந்திரம் உடைக்கும் சத்தத்தை கேட்பதாக அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த நபர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தனி நபர் ஒருவர் ஏடிஎம் மையம் அருகே சென்றபோது ஷட்டரை மூடிக்கொண்டு உள்ளே 4 நபர்கள் பதுங்கியிருந்து மெஷினை உடைத்திருந்ததாகவும் ஷட்டரை மூடியபடி பிடித்துள்ளார்.
வெளியே காவலுக்கு பதுங்கியிருந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பின்பு ஆறு கொள்ளையர்களும் தப்பி ஓடி சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துளையினருக்கு தகவல் அளித்துள்ளது அடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் வகையில் தடவியல் துறை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து எ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.