கிராம மக்களை கோழிப்பண்ணையில் பூட்டு போட்டு அடைப்பு…

12 August 2020, 11:34 pm
Quick Share

தருமபுரி: அரூர் அடுத்த கருங்கல்பாடி கிராமத்தில் உள்ள தனியார் கோழி பண்ணையில், கொட்டபடும் கழிவுகளால் ஈக்கள் உற்பத்தியாகி 7க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கருங்கல்பாடி கிராமத்தில் எஸ்.கே.எம் என்ற பெயரில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இதில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழக்கின்றன. இறந்து போன கோழிகளை சுகாதாரமற்ற முறையில் தீட்டு எரிப்பதால் அப்பகுதிகளில் கரும்புகையுடன் துர்நாற்றம் வீசி வருகிறது. தருமபுரி மாவட்டத்திலுள்ள மேல் செங்கப்பாடி, கருங்கல்பாடி, ஆலம்பாடி, மூன்றம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளங்குன்னி, நீபத்துறை, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கோழியின் கழிவுகளால் உற்பத்தியாகுகின்ற ஈக்கள் பரவி வருவதால் கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஆடு, மாடு மேய்ச்சலுக்கு இடையூறாகவும் அப்பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈக்களின் மூலம் பரவும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக ஈக்களின் தொல்லை அதிகரிப்பால் கிராம மக்கள் இன்று தனியார் கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் முறையிட சென்றபோது பூட்டு போட்டு அடைத்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் விரைந்து சென்று கேட்டில் போட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே இருந்த கிராம மக்களை மீட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்தபோது கோழிப்பண்ணை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சப் கலெக்டர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்துள்ளதாகவும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும், வேட கட்டமடுவு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம மக்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த கோழி பண்ணையை நடத்தி வருவதாகவும், சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் இருக்கும் இந்த கோழிப்பண்ணையை அகற்றி கிராம மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Views: - 34

0

0