திமுக தலைவர் ஸ்டாலின் மனுக்கள் பெறுவது இதுவே கடைசியாக இருக்கும்: பாஜக மாநில செயலாளர் பாஸ்கரன் பேட்டி

7 February 2021, 9:49 pm
Quick Share

தருமபுரி: திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டு வருகிறார் இதுபோன்ற மனுக்கள் பெறுவது இதுவே கடைசியாக இருக்கும் ஏனெனில் இனிவரும் காலங்களில் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது என தருமபுரியில் பாஜக மாநில செயலாளர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

தருமபுரியில் பாஜக மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு நமது இந்திய தேசத்தின் கட்டமைப்புகளும் திட்டங்களும் சீரிய முறையில் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மதுரையிருந்து கேரளம் மாநிலம் கொள்ளம் வரை மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக 1.03 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதிக்கி உள்ளார்கள். மேலும் 100 சைனீஸ் பள்ளிகளையும் திறக்கப்பட உள்ளது எனவும், அதில் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒரு பள்ளி கட்டாயம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் அது நிச்சயமாக கொண்டுவரப்படும் எனவும்,

அதுமட்டுமன்றி இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் எனவும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. ஒரு வலிமையான இந்திய தேசத்தை உருவாக்கபடும் என அனைத்து தரப்பினரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாரத பிரதமரை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அது தேர்தலுக்காக மட்டுமே என்றும், வாக்கு பெற வேண்டும் என்பதற்காகவே கொண்டு வருகிறார்கள் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும், திமுகவை சேர்ந்தவர்களும் கூறிக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் நாங்கள் கொண்டு வந்தால் தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் எதற்காக என கூறினார். அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்வார்கள் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பெட்டியில் போட்டு பூட்டு போட்டு தனது பாக்கெட்டில் சாவியை போட்டு வைத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என கூறிக்கொண்டு வருகிறார். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியே வாக்குகள் பெற்று பதவி சுகம் அனுபவித்து வந்தார்கள் இவர்கள்.

ஆட்சியில் இருந்தபோது எந்த மக்களிடத்திலும் மனுக்களை வாங்காதவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கள் தேர்தல் நேரங்களில் இது போன்ற நாடகங்கள் எதற்காக எனவும், தற்போது மட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற மனுக்கள் பெறுவது இதுவே கடைசியாக இருக்கும். ஏனெனில் இனிவரும் காலங்களிலும் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது. ஏனெனில் மக்கள் அனைவரும் திமுகவை பற்றியும், திமுக தலைவர் பற்றியும் நன்கு அறிந்துள்ளார்கள். இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் எனவும் தற்போது மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சியின் பாரத பிரதமர் நல்ல பல திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் கேட்கவில்லை என்றாலும் மக்களுக்கு நேரடியாக பல திட்டங்களை கொண்டு செல்வதில் அயராது பாடுபட்டு வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அனைவருக்கும் வீடு சுகாதாரமான கழிப்பறை அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு மூன்று கட்டங்களாக 6ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது இன்னும் பல திட்டங்களை தமிழகத்திற்க்கு முக்கியதுவம் கொடுத்து பாதுகாத்து கொண்டு எனவும் தெரிவித்தார்.

Views: - 0

0

0