11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பூ வியபாரி

Author: Udayaraman
5 October 2020, 8:20 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பூ வியபாரி போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்த பூவியபாரி பெரியசாமி என்பவர் அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு பெரியசாமி தான் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற நிலையில்,நேற்று பெரியசாமி குடியிருந்த பழைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததையை பயன்படுத்தி வீட்டின் உரிமையாளரின் மகள் 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வெளியே சென்றிருந்த சிறுமின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்த போது சிறுமியின் அழுகுரல் கேட்டதை பார்த்த போது பெரியசாமி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததை கண்டு அதிர்சியடைந்தார்.

பின்னர் சிறுமியின் தாயை கண்டதும் பெரியசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பூவியபாரி பெரியசாமியை இன்று பிடித்து வந்து விசாரணை செய்ததில், அவர் பாலியல் தொந்தரவு செய்தது உண்மை என்றும், இது போல் சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததும் தெரிய வந்ததையடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Views: - 37

0

0