தருமபுரியில் இருதய உள் ஊடுருவி கணிப்பு ஆய்வகம் திறப்பு

4 February 2021, 3:26 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய உள் ஊடுருவி கணிப்பு ஆய்வகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும், மாரடைப்பை கண்காணித்து தடுக்க சிகிச்சையளிக்க உரிய உபகரணங்கள் இல்லாதததால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமவைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஏழ்மையான நோயளிகள் தனியார் மருத்துவனைக்கு சென்று அதிகம் பணம் கொடுத்து செல்ல முடியாத நிலையில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயத்திற்கு என 3. 5 கோடி மதிப்பில் மாரடைப்பு வருவதற்கு முன்பே கண்டறிந்து சிகிச்சையளிக்க ஏதுவாக இருதய உள் ஊடுருவி கணிப்பு தனி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்தபடி காணொளி மூலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார். பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் பி கார்த்திகா குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதேபோல் பென்னாகரத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பென்னாகரம் பேருந்து நிலையத்தை ரூ.4.50 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்கும் முதலமைச்சர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Views: - 0

0

0