கோரையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

Author: kavin kumar
29 August 2021, 1:27 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள கோரையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை தூர்வாரி விவசாயிகள் பயன்பெரும் வகையில் அங்குள்ள நீர்வழி பாதையை சீர்செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் விவசாயத்தையே பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் சிறுதானியங்களான ராகி, சோளம், கம்பு, சாமை உள்ளிட்டவை அதிக அளவு விவசாயம் செய்யபடுகிறது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் கரும்பு, மரவள்ளிகிழங்கு, பருத்தி, மஞ்சள் உள்ளிட்டவை அதிகளவில் விவசாயிகள் பயிரிடபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாப்பிரெட்டிபட்டி அடுத்த பாப்பம்பாடி கிராமம் வழியாக செல்லும் கோரையாற்றிக்கு மழை காலங்களில் சேர்வாரயன் மலை தொடரில் இருந்து தண்ணீர் வருகிறது. அப்பகுதி விவசாயிகள் அங்கிருந்து வரும் நீரை ஆதரமாக கொண்டு பல ஆண்டுகளாக விவசாயம் செயது வந்தனர்.

இந்நிலையில் இந்த கோரையாற்றின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 15 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள எருமியாம்பட்டி, கொக்காரப்பட்டி, பாப்பம்பாடி, புதுப்பட்டி உள்ளிட்ட 5 கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசனவசதி பெற்று வந்ததோடு அப்குதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யபட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த தடுப்பணைக்கு வரும் நீர்வழி பாதை முழுவதும் புதர் மண்டி, மழை காலங்களில் சேர்வராயன் மலை தொடரில் இருந்து வரும் மண், கற்கள் ஆக்கிரமித்து கொண்டு உள்ளதால் தற்போது சுமார் அந்த தடுப்பணை 5 அடி உயரம் மட்டுமே உள்ளதால் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.

இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கபடுகிறது. மேலும் இந்த தடுப்பணையில் இருந்து செல்லும் நீர் வீனாக வாணியாற்றில் கலந்து விடுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இந்த தடுப்பணையை தூர்வாரி, நீர் வழிப்பாதையை சீர் செய்து மீண்டும் விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளின் ஒட்ட மொத்த கோரிக்கையாக உள்ளது.

Views: - 397

4

0