பெற்றோர்களிடம் நேரில் சென்று கருத்து கேட்ட ஆட்சியர் கர்த்திகா

9 November 2020, 11:16 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கலம வேண்டாமா என பெற்றோர்களிடம் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கர்த்திகா நேரில் சென்று கருத்து கேட்டார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இதனையடுத்து படிப்படியாக தளர்வுகள் தளர்த்தப்பட்ட பிறகு வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை மாணவ,மாணவிகளை வரவழைத்து வகுப்புகள் நடத்த பள்ளிகல்விதுறை அமைச்சர் அறிவித்திருத்தார். இதற்கு எதிர்கட்சிகள் பள்ளிகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தமிழகத்தில் அந்த அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவ,மாணவிகளின் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பது குறித்தது கருத்து கேட்க தமிழக அரசு உத்திரவிட்டது.

இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.அதன் அடிப்படையில் இன்று தருமபுரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிøல்பள்ளியில் நடைபெற்ற கருத்து கேட்டு கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வந்து ஆய்வு செய்தார். அப்போது பெற்றோர்களிடம் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாமா என கருத்து கேட்டார். இதற்கு பெற்றோர்கள் கைகளை தூக்கி பள்ளிகள் திறக்கலாம் என தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

Views: - 16

0

0