தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு: பொது மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை

8 May 2021, 4:36 pm
Quick Share

தருமபுரி: அரூர் நகரில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்தனர்.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வீசி வருவதால் மருத்துவம், சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கபட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் அரூர் நகரின் மேல் பாட்ஷாபேட்டை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இந்நிலையில் அரூர் திருவிக நகர், கோவிந்தசாமி நகர் பகுதியில் இன்று 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவிக நகர் மற்றும் கோவிந்தசாமி நகரில் தொற்று ஏற்பட்டுள்ள பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த 2 தெருக்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூட அரூர் பேரூராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

Views: - 51

0

0