துப்புரவு பணியாளர் உட்பட 66 பேருக்கு கொரோனா

18 September 2020, 3:06 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மருத்துவர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் உட்பட 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடந்து கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் இன்று மருத்துவர், காவலர், துப்புரவு பணியாளர், கூலி தொழிலாளர் என 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மாணவர்கள், இல்லத்தரசிகள் அதிக அளவில் கொரோனா தொற்று பாதிக்கபட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்களின் 2,446 பேரும், குணமடைந்தவர்கள் 1,483 பேரும், உயிரிழந்தவர் 21 பேரும் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 66 பேர் பாதிக்கபட்ட நிலையில் மாவட்டத்தில் 2,512 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பாதிப்பு அதிகரிக்ககூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது.

Views: - 6

0

0