கோவில்களில் பணியாளர்களுக்கு 16 வகையான மளிகை பொருட்கள் வழங்கல்

17 June 2021, 6:58 pm
Quick Share

தருமபுரி: கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்திரவால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கபட்ட தருமபுரி மாவட்டத்திலுள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட 313 பயனாளிகளுக்கு 4000 ரூபாய் உதவி தொகை மற்றும் 16 வகையான மளிகை பொருட்களை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர். அதனை அடுத்து தமிழக அரசு கொரானா நோய் தொற்றை குறைக்கும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து தமிழக அரசு வழங்கி வருகிறது. அதனடிப்படையில் இந்து சமயஅறநிலை துறை கீழ்உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்க தொகையாக

ரூபாய் நான்காயிரம் மற்றும் 10 கிலோ அரிசியுடன் 16 வகையான மளிகைப் பொருட்களையும் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்திலுள்ள 313 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் நான்காயிரம் மற்றும் 16 வகையான மளிகைப் பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார். இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 121

0

0