மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

8 July 2021, 5:29 pm
Quick Share

தருமபுரி: ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவையாற்றி வந்த ஸ்டேன் சாமியை பொய் வழக்கில் கைது செய்து அவர் மரணத்திற்கு காரணமான பாஜக அரசை கண்டித்து தருமபுரியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமி 84 வயதாகும் அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராடி வந்தவர். இவரை எல்கார் பரிசத் வழக்கில் சட்டவிரோதமாக நடவடிக்கைகள் தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்து ஒன்றிய அரசு சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமின் மறுக்கபட்ட நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் கடந்த 5 ந் தேதி மரணமடைந்தார்.

இவரது மரணத்திற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனடிப்படையில் இன்று தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இ.கம்யூ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தஆர்பாட்டத்தில் கண்டன கோஷங்களை முழங்கினர்.

Views: - 110

0

0