முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விடப்பட்ட முதலை…

11 August 2020, 11:34 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 70 கிலோ எடை கொண்ட முதலையை வனத்துறையினர் பிடித்து முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விடப்பட்டது.

தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் காவிரி ஆறு என்றாலே நினைவுக்கு வருவது ஐந்தருவி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் ஃபால்ஸ் சினி பால்ஸ் ஆயில் மசாஜ் மீன் மற்றும் முதலை பண்ணைகள் தான். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ராசிமணல் ஊட்டமலை மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான முதலைகளின் வாழ்விடமாக கருதப்படும் இப்பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையில் அடிக்கடி முதலைகள் தண்ணீரில் உலா வருவது வழக்கம்.

கடந்த இரண்டு வாரமாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றின் வழியாக கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் வந்து சென்றது. இதனால் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு ராசிமணல் ஊட்டமலை மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையில் உள்ள முதலைகள் அடித்து வரப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அருவியின பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையின் அருகே சுமார் 70 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று சுற்றி திரிவதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் ஒற்றை முதலையை நேற்று பிடித்து முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட்டனர்.

தற்போது நீர்வரத்து குறைந்ததால் முதலைகள் ஆற்றங்கரையில் இருந்து ஊருக்குள் உலாவர வாய்ப்புள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு ஆற்றில் இருக்கும் முதலைகளை பிடித்து முதலைகள் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 8

0

0