முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின்: இனிப்புகள் வழங்கி கொண்டாடிய திமுகவினர்

7 May 2021, 3:54 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி நகர திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதற்க்காக மாவட்ட திமுக அலுவலகம் அருகே பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் தருமபுரி திமுக நகர செயலாளர் அன்பழகன் தலைமையில் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அதனையடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். அதே போல் மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

Views: - 50

0

0