ஓட்டுனர் உரிமத்திற்கு லஞ்சம் கேட்ட அதிகாரிகள்: மனமுடைந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி

By: Udayaraman
31 July 2021, 1:28 pm
Quick Share

தருமபுரி: கடத்தூரில் ஓட்டுனர் உரிமத்திற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் மனமுடைந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பாத்திமா நகர் காமராஜபுரத்தை சேர்ந்த துரை ராஜ் என்பவர் லாரி ஓட்டுனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பைக் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் காவல்துறையினர் இவரிடமிருந்த ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டு உரிமத்தை ரத்து செய்வதாக கூறி அனுப்பி உள்ளனர். இதனையடுத்து ஓட்டுனர் துரைராஜ் மீண்டும் ஓட்டுனர் உரிமைத்தை பெறுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வழங்கி உள்ளார். அது போதாது மீண்டும் 5 ஆயிரம் வழங்கினால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து காவலர்கள் கூறி உள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் அவரது மனைவியின் சொந்த ஊராக தருமபுரி மாவட்டம் பொம்மிடிக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவியிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் லாரி ஓட்ட முடியவில்லை என வேதனையுடன் கூறியதையடுத்து,

கடத்தூர் பேருந்து நிலையம் அருகே இருந்த செல்போன் டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைஅருகே இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் தற்கொலைக்கு முயன்ற துரைராஜியிடம் பேச்சு வார்த்தை செய்தனர். அதற்கு துரைராஜ் லஞ்சம் கொடுத்தும் ஓட்டுனர் உரிமம் வழங்காமல் மீண்டும் லஞ்சம் கேட்டு போக்குவரத்து காவலர்கள் தொந்தரவு செய்வதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். இதனை நீண்ட நேரம் சமாதானம் செய்த காவல்துறையினர் அவரை மேலே இருந்து கீழே இறக்கி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Views: - 112

0

0