கிணற்றில் தவறி விழுந்த காட்டுயானைக்கு மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி மீட்கும் பணி தீவிரம்.

19 November 2020, 8:37 pm
Quick Share

தருமபுரி: பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுயானைக்கு மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள 50 அடி ஆழத்தில் இன்று அதிகாலை காட்டு யானை தவறி விழுந்தது. இதனை மீட்க அதிகாலை 4 மணி முதல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்து யானைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தி யானையை மீட்க முயன்றனர். ஆனால் யானை மயக்க நிலை அடையாததால் மீண்டும் மூன்றாவது முறையாக கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்திய பிறகு யானை மயக்க நிலையை அடைந்துள்ளது.

அதன் பிறகு மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் ராட்ஷத கிரேன் மூலம் கிணற்றில் இறங்கி யானையை சுற்றி பெல்ட் மற்றும் கயிறு மூலமாக கட்டி மேலே எடுக்கும் பணியில் தற்போது நடைபெற்று வருகிறது. இரவு நேரமாகிவிட்டதால் கிணற்றை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்து யானையை மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த 15 மணி நேரமாக கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் யானையை உயிருடன் மீட்டுவிடுவோம் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0