கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

19 November 2020, 11:10 pm
Quick Share

தருமபுரி: பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள 50 அடி ஆழத்தில் இன்று அதிகாலை காட்டு யானை தவறி விழுந்தது. இதனை மீட்க அதிகாலை 4 மணி முதல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்து யானைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தி யானையை மீட்க முயன்றனர். ஆனால் யானை மயக்க நிலை அடையாததால் மீண்டும் மூன்றாவது முறையாக கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்திய பிறகு யானை மயக்க நிலையை அடைந்தது.

அதன் பிறகு மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் ராட்ஷத கிரேன் மூலம் கிணற்றில் இறங்கி யானையை சுற்றி பெல்ட் மற்றும் கயிறு மூலமாக கட்டி மேலே எடுக்கும் பணியில் ஈடுப்பட்ட போது எதிர்பாராதவிதமாக யானையின் மீது கட்டப்பட்ட கயிறு நழுவி கிணற்றின் பக்கவாட்டில் விழுந்தது. இதனை தொடர்ந்து யானை மீண்டும் கிணற்றுக்குள் விழாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு யானையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டனர். 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சையளிக்க உள்ளனர். யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு யானையை அஞ்செட்டி காப்பு காட்டில் விடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0