மாதிரி வாக்கு பதிவை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

4 March 2021, 2:29 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலையத்தில் மின்னனு வாக்குபதிவு மற்றும் விவி பேட் இயந்திரத்தில் மாதிரி வாக்கு பதிவை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் தருமபுரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தருமபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மின்னனு வாக்கு பதிவு மற்றும் விவி பேட் இயந்தித்தில் மாதிரி வாக்கு பதிவு செய்ய மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கார்த்திகா துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வைக்கப்பட்டிருந்த மாதிரி மின்னனு வாக்கு இயந்திரத்தில் வாக்கு பதிவு செய்தனர். இந்நிகழ்சியில் சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Views: - 4

0

0