காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

27 November 2020, 5:11 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கடந்த 8 மாதங்களாக கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் தாலுகா அளவிலான வேளாண் துறை அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தங்களது குறைகளை தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் கார்த்திகா விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை. வேளாண் பொறியியல்துறை. பட்டு வளர்ச்சி துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விடை அளித்தனர்

Views: - 16

0

0