தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி… தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்ட தீயணைப்பு அலுவலகம்

14 August 2020, 2:29 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்தில் மூன்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் துப்புறரவு பணியாளர் என நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தீயணைப்பு அலுவலகம் தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் 25 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் மூன்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் இதே அலுவலகத்தில் துப்புறவு பணியாளராக வேலை செய்பவர்கள் என நான்கு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து.

தீயணைப்பு அலுவலகம் தற்காலிகளாக மூடப்பட்டு அங்கு பயன்படுத்திய தீயணைப்பு வாகங்களை அங்கியே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அருகே உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தீயணைப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி மற்ற தீயணைப்பு வீரர்கள் அவர்களது வீடுகளியே தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Views: - 1

0

0