தருமபுரியில் நடைபெறும் சூதாட்டம்:நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் புகார்

Author: kavin kumar
13 August 2021, 11:29 pm
Quick Share

தருமபுரி: புலிக்கரையில் சூதாட்டம் மற்றும் சந்துக்கடையில் மது விற்பவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், புலிக்கரை காரிமங்கலம், பாலக்கோடு, இண்டூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் மறைவான இடங்களில் பல லட்சம் ரூபாய் பணம் வைத்து சூதாட்ட தொழில் காவல்துறையினர் துணையுடன் படுஜோராக நடக்கிறது. இதனால் பலர் லட்சகணக்ககான பணம், பைக், நகைகளை, வீடுகளை இழக்கின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் வேலை இன்றி வீட்டில் இருந்தாலும் வட்டிக்கி கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் ஏழ்மையில் வாடுகிறது. மேலும் பணம் மற்றும் உடமைகளை இழந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் சூழ்நிலைக்கு தள்ளபடுகின்றனர். அதே போல் பாலக்கோடு ரோட்டில் உள்ள புலிக்கரை பகுதியில் பரமசிவம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

அவரது கடையில் இரவு பகலாக கள்ளத்தனமாக அரசு மதுபானங்கள் விற்பனை செய்து வருகிறார். மேலும் அவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ரயில்வே ரோடு அருகே மறைவான வீட்டில் சூதாட்டம் நடத்தி வருகிறார்.இப்பகுதியில், தருமபுரி மட்டும் அல்லாமல் கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் வைத்து சீட்டு விளையாடு வருகின்றனர். பணத்தை இழப்பவர்களுக்கு அங்குள்ளவர்களை 10 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து விளையாட வைக்கின்றனர். இதனால் பலரது குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,

சூதாட்டம் மற்றும் கள்ளசந்தையில் மது விற்பனை செய்து வரும் பரமசிவத்திற்கு காவல்துறையினர் ஆதரவாக இருப்பதாகவும், அதனால் நடவடிக்கை எடுக்க மதிகோண்பாளையம் காவல்துறையினர் மறுப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று சூதாட்டம் மற்றும் கள்ளதனமாக மதுவிற்பனை செய்யும் பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புலிக்கரை பகுதியில், சூதாட்டம் மற்றும் சந்துக்கடை மதுபான விற்பனை செய்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி ஆர்பாட்டம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

Views: - 184

0

0