தருமபுரியில் பரவலாக கனமழை… விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி…
3 August 2020, 9:45 pmதருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் சாரல் மற்றும் கனமழை பெய்து வந்தது. இதே போல் இன்று காலை முதல் வெயிலியின்றி வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் மாலை திடிரென சாரல் மழை பெய்யத்துவங்கியது. பின்னர் இந்த மழை படிப்படியாக அதிகரித்து தருமபுரி அதனை சுற்றி உள்ள நல்லம்பள்ளி,
அதியமான்கோட்டை, செந்தில்நகர், பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சாலைகளில் ஊர்ந்து சென்றனர். இதே போல் மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பென்னாரகம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இன்று பெய்த மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயரம் என்பதால் ஆடி பட்டம் விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.