காந்தி மற்றும் நேருவின் வெண்கல சிலைகளை திறந்து வைத்த அமைச்சர் கே.பி.அன்பழகன்

8 November 2020, 6:03 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் பாரதமாதா ஆன்மீக சேவை மையம் சார்பில், அமைக்கப்பட்ட காந்தி மற்றும் நேருவின் வெண்கல சிலைகளை தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

பாரதமாதா ஆன்மீக சேவை மையம் சார்பில், தருமபுரி, எஸ்.வி,சாலையில் தியாகி சுப்பிரமணிய சிவா பாரதா மாதா மணிமண்டபத்தை புதுப்பித்து அதில் தேசத்தந்தை காந்தியடிகள் மற்றும் ஜவஹலால் நேரு ஆகியோருக்கு வெண்கல சிலைகள் அமைக்கப்பட்டனர். இந்த இரு சிலைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக உயர்கல்விதுறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு சிலைகளை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் விடுதலை போராட்ட வீரர் சுபாஷ்சந்திர போஸ் போர்படையில் பெண் வீரராக பணியாற்றிய சுதந்திர போராட்ட தியாகி சிவகாமி அம்மையாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இந்த விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 13

0

0