காவிரி ஆற்றிலிருந்து நீரேற்றும் நிலையத்தை முதல்வர் ஆய்வு

Author: kavin kumar
30 September 2021, 4:56 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து நீரேற்றும் நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

2007 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் ஜப்பான் பன்னாட்டு நிதி உதவியுடன் தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் 2008ஆம் ஆண்டு ஒகேனக்கல் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கல் நாட்டினார் . அப்போதைய காலகட்டத்தில் துணை முதல்வராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அவ்வப்போது வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில்,

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து 2013 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கப்பட்டு தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஒகேனக்கல்லுக்கு வருகை தந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து நீரேற்று நிலையம் மற்றும் நீர் சேமிப்பு நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

Views: - 212

0

0