வனப்பகுதியில் பிடிப்பட்ட 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

Author: Udhayakumar Raman
21 September 2021, 5:53 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் முதலைப் பண்ணை அருகே சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையைக் கடக்கும் பொழுது வனத்துறையினரால் பிடிபட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள், பாம்பினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு 10 மணி அளவில் முதலைப் பண்ணை அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டிய சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மலைப்பாம்பு ஒன்று சென்றதை பொதுமக்கள் பார்த்ததை அடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சேகர் தலைமையிலான வனக்குழுவினர் முதலைப்பண்ணை காவலர்கள் உள்ளிட்டோர் சுற்றித் திரிந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடிக்க முற்பட்ட பொழுது மலைப்பாம்பு சீர தொடங்கியது. பின்னர் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஆலம்பாடி காப்புக்காட்டில் விட்டனர்.அடிக்கடி பாம்புகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை கடப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர்.

Views: - 33

0

0