தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

1 November 2020, 7:58 pm
Quick Share

தருமபுரி: தொடர் விடுமுறையையொட்டி இன்று ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பல்வேறு தளர்வுகளுடன் செயல்பட்டு வருவதை, தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 10 தினங்களுக்கு முன் மாவட்ட நிர;வாகம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து இந்த வாரம் மிலாடி நபி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை என்பதால், இன்று விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் இன்று வருகைபுரிந்ததால் களைகட்டியது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியில் தெர்மல் ஸ்கேனர் மூலம், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்பே அனுமதியளிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள், தொங்கு பாலத்தின் மீது நின்று ஆர்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்தும், ஆயில் மசாஜ் செய்தும், அங்குள்ள மெயின் பால்ஸ், சினி பால்ஸ்சில் குளித்தும், குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்து அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் ஒகேனக்கலில் பிரதான மீன் வருவளை சுவைத்தும் மகிழ்ந்தனர். மேலும் 7 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகையால், அங்கு வாழ்வாதாரம் இன்றி தவித்த மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், மீன் வியாபாரிகள், சமையல் செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Views: - 19

0

0