மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக நீர்வரத்து அதிகரிப்பு

20 October 2020, 3:25 pm
Quick Share

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கர்நாடக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 15ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 16ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால். அங்குள்ள மெயின்அருவி. சினி அருவி. ஐந்தருவி. தொடர் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டுகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையாமல் தெடந்து உயர்ந்துள்ளது.

Views: - 13

0

0