அபராதம் விதிக்க வரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது: வணிகர்களுக்கு அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவுரை

20 April 2021, 8:17 pm
Quick Share

தருமபுரி: அபராதம் விதிக்க வரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என கொரோனா தடுப்பு நடவடிக்கை கூட்டத்தில் அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் வணிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி மூலம் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து தினசரி பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 100ஐ கடந்த நிலையில் நேற்று மட்டுமே 146ஆக உயர்ந்து. தற்போது 746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் செயல் அலுவலர் கலைராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், அனைத்து வங்கி மேலாளர்கள், இறைச்சி கடை வியாபாரிகள், டியூசன் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

அப்போது நோய் தடுப்பு பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றி கட்டாயம் முகத்தில் முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும், அதேபோல கடைக்கு முன்பு சேனிடைசர் பயன்படுத்த வேண்டும், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு இருப்பதால் அனைவரும் வழி முறைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும், அபராதம் விதிக்க வரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என கொரோனா தடுப்பு நடவடிக்கை கூட்டத்தில் அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் வணிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் பேரூராட்சி நிர்வாகிகள், சுகாதார துறையினர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 18

0

0