வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியல் தான் வெற்றிபெறும்: இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி…

28 August 2020, 7:59 pm
Quick Share

தருமபுரி: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசிலுக்கும், திராவிட கட்சிகளுக்கும் தான் போட்டி என்றும், இதில் ஆன்மீக அரசியல் தான் வெற்றிபெறும் என தருமபுரியில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

பெங்ளூரில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து ஒசூரில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். முன்னதாக தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதவாது:- பெங்களூரில் மதவாத அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்திற்கு காரணமான பாப்புலர் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என பாரத பிரதமர், கர்நாடக மற்றும் தமிழக முதலவர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

நீட் தேர்வு மத்திய அரசு உத்தரவு அல்ல. அது நீதிமன்றத்தின் உத்திரவு. தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் திமுகவினர் நீட் தேர்வில் மாணவி இறந்துவிட்டார் என அரசியல் செய்கிறார்கள். இனியும் இவர்களது அரசியல் தமிழகத்தில் நடக்காது. மாணவர்கள் தேர்வு எழுத தயார் நிலையில் உள்ளனர். திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் திமுக மற்றும் அதிமுகவினர் கையில் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த சொத்துகளை மீட்க நாங்கள் நீதிமன்றத்தை நாடி பல சொத்துகளை மீட்டு உள்ளோம். எனவே அறநிலைத்துறையை கலைத்து விட்டு பக்தர்களிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைத்தால் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்டெடுக்கலாம். வரும் சட்டமன்ற தேர்தலில்,

ஒருபக்கம் ஆன்மீக அரசியல் மற்றொரு பக்கள் திராவிட கட்சிகள் இந்த இரு அணிக்கும் தான் போட்டி இருக்கும், இதில் ஆன் மீக அரசியல் வெற்றிபெறும் ஆன்மீக அரசியல் என்பது பதவியை முன் நிறுத்தி அல்ல கொள்கை மற்றும் மக்களை முன் நிறுத்திதான் நடைபெறும். அதிமுக வேறு கட்சி பிஜேபி வேறு கட்சி தேர்தல் வந்தால் கூட்டணி வைப்பார்கள் அல்லது பிரிந்துகொள்வார்கள் அது அக்கட்சிகளின் விருப்பும். ஆனால் திமுக இந்த இரு கட்சிகளுக்கு இடையே சண்டையை மூட்டி வருகிறது. தமிழகத்தில் திமுகவின் அரசியல் சித்து விளையாட்டு இனி எடுபடாது.

காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை தர்மபுரி மாவட்ட விவசாய பாசனத்திற்கு கொண்டு வந்து ஏரி,குளங்களை நிரப்ப வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை மட்டும் அல்ல இந்து மக்கள் கட்சியின் கோரிக்கையாகும். ஆனால் திமுக தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் செந்தில்குமார் தருமபுரி மாவட்ட மக்களுக்கு நீர் மேலாண்மை திட்டத்திற்கு போராடாமல் அரசியல் நாடாகமாடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 24

0

0