சட்டவிரோதமாக குடியேறியுள்ள பயங்கரவாதிகளை தனிப்படை அமைத்து ஒடுக்க வேண்டுகோள்

By: Udayaraman
11 October 2020, 8:26 pm
Quick Share

தருமபுரி: கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் போலியான ஆவணங்கள் பெற்று சட்டவிரோதமாக குடியேறியுள்ள பயங்கரவாதிகளை ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் தனிப்படை அமைத்து ஒடுக்க வேண்டும் என தருமபுரியில் இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயற்குழுக்கூட்டம் தருமபுரியில் தனியார் கல்லூரியில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில இணைச் செயலாளர் ராஜேஷ் மற்றும் மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். அதனையடுத்து செய்தியார்களை சந்தித்த மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் பேசுகையில், “கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஆன்மீக தளத்தை உருவாக்கி, உலக கட்டிடக்கலைக்கு சவால் விட்ட ராஜேந்திரசோழனுக்கு மணிமண்டபம் மற்றும் அவரது முழு உருவ சிலையை அமைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வேளாண் மசோதா மற்றும் புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றைக் கொண்டு வந்த மத்திய அரசுக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும், மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சிலர் கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்று சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இவர்கள் மூலம் இந்த நகரங்களில் பயங்கரவாத தாக்குவதலுக்கு வாய்ப்புள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பயங்கரவாதிகளை ஒழிக்க ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான ஒரு தனிப்படை ஏற்படுத்தி அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக குடியேறியுள்ள அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Views: - 25

0

0