இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: அரசு ஆசிரியர் பலி…

Author: Udhayakumar Raman
22 September 2021, 5:54 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் நெடுஞ்சாலையில் இண்டூர் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அரசு ஆசிரியர் உயிரிழந்தார்.

தருமபுரி அடுத்த ஏ.செக்காரப்ட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் இவர் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசுப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தவாறு சென்றுள்ளார். அப்போது தருமபுரி ஒகேனக்கல் தேசிய சாலையில் இண்டூர் கடைவீதி வழியாக செல்லும்போது பின்னாடி வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி மீது கவனக்குறைவாக உரசியதால் அங்கேயே இவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

டிப்பர் லாரி சக்கரங்களுக்கு இடையே விழுந்ததால் அவர் மீது டிப்பர் லாரி ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த இண்டூர் காவல்துறையினர் முத்துவேலுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டி சென்ற ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 173

0

0