கனகாம்பரம் பூவுக்கு ஆண்டு முழுவதும் நல்ல மவுசு: கனகாம்பரம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்

13 April 2021, 6:19 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், கனகாம்பரம் பூவுக்கு ஆண்டு முழுவதும் நல்ல மவுசு உள்ளால், ஏராளமான பகுதிகளில் கனகாம்பரம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில், மா,நெல்,மஞ்சள்,மரவள்ளிகிழங்கு அதிகளவில், சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக,காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்., செவ்வந்தி, சம்பங்கி, சாமந்தி,பட்டன் ரோஸ், கனகாம்பரம், மல்லிகை போன்ற பல்வேறு வகையான மலர் வகைகளை, ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் கனகாம்பரம் ஒரு முறை வைத்தால், ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம் என்பதாலும்,

மற்ற மலர்களை விட கனகாம்பரத்திற்கு ஆண்டு முழுவதும் கட்டுபாடான விலை கிடைப்பதால் விவசாயிகள் மத்தியில் கனகாம்பரம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சீசன் இல்லை என்றாலும், ஒரு கிலோ கனகாம்பரம், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கனகாம்பரத்திற்கு நல்ல லாபம் கிடைத்தும், அறுவடை செய்ய கூலி ஆட்கள் கிடைக்காததால், விவசாயிகள் கவலைடைந்து உள்ளனர். அறுவடை செய்ய கூலி ஆட்கள் இல்லாததால், விவசாயிகளே பூக்களை அறுவடை செய்து வருகின்றனர்.

Views: - 18

0

0