மாறுகொட்டாய் பகுதியில் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

5 October 2020, 1:19 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல்லின் மறுக்கரையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட அமைந்துள்ள மாறுகொட்டாய் பகுதியில் ஏழு மாதங்களுக்குப் பிறகு அம்மாநில அரசு பரிசல் இயக்க அனுமதி அளித்துள்ளதால் பரிசல் ஓட்டிகள் மற்றும் கர்நாடக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. அதன் பின்பு அந்தந்த மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது போக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மத்திய அரசு அந்தந்த மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்பு கொரோனா வைரஸ் பரவல் குறைவாக உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அழிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு முற்றிலுமாக தளர்த்தப்பட்டு பொதுப் போக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தளங்கள், தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் <உள்ள ஒகேனக்கல்லின் மறு கரையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட மாறுகொட்டாய் பகுதியில் பரிசல்கள் இயக்க அந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக இன்று கர்நாடக எல்லையில் அமைந்துள்ள மாறுகொட்டாயிலிருந்து அங்குள்ள ஐவர் பாணி அருவி கண்டு கழித்துவிட்டு அங்கிருந்து பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடந்து தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல்லுக்கு பரிசலில் சவாரி செய்து ஐந்தருவி, , மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளை சுற்றி பார்த்து மசாஜ் செய்து ஆற்றில் குளித்து மீன் சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாறுகொட்டாய் பகுதியில் பரிசல் இயக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளையெ நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், என இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கவேண்டுமென தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திடம் ஒகேனக்கல் சேர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 34

0

0