கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் 14 பவுன் நகை திருட்டு

28 January 2021, 4:14 pm
Quick Share

தருமபுரி: இண்டூர் அருகே பிஎஸ் அக்ரஹாரத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் 14 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஎஸ் அக்ராகரம் கிராமத்தில் இன்று பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டணத்து மாரியம்மன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணியிலிருந்து பத்தரை மணி வரை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு சுற்றுவட்டார பதினெட்டுப்பட்டி கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். அப்போது ஸ்ரீ பட்டணத்து மாரியம்மன் கோவில் கலசத்திற்கு அர்ச்சகர்கள் தீர்த்த குடம் தண்ணீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அந்த புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர்.

அந்த புனித நீரை வாங்க ஏராளமான பக்தர்கள் முன்டியடித்து சென்றதால் கூட்ட நெறில்ச ஏற்பட்டது. இந்த கூட்ட நெறிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் நெற்குந்தி கிராமத்தைச் சேர்ந்த அப்பம்மாள் என்கிற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினும், பிஎஸ் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி என்கிற பெண்ணிண் கழுத்திலிருந்து நான்கு பவுன் தங்க செயினையும், அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் கழுத்தில் இருந்த 7 பவுன் நகை என மொத்தம் 14 பவுண் நகையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தங்க தாலி செயினை பறிகொடுத்த பெண்கள் கதறி அழுதபடி காவல்துறையினரிடம் முறையிட்டனர். இது குறித்து இண்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0