குடியிருப்புகளை காலி செய்யும் முயற்சியை அதிகாரிகள் கைவிடக்கோரி பொதுமக்கள் மனு
3 September 2020, 4:27 pmதருமபுரி: பென்னாகரம் அருகே குறவர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பத்தினர் குடியிருப்புகளை காலி செய்யும் முயற்சியை அதிகாரிகள் கைவிடக்கோரி மாவட்ட ஆதி திராவிடர் அலுவலக அதிகாரியிடம் பாதிக்கப்பட்வர்கள் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் குறவன் காலனியில் 40 குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்தாண்டு இந்த குடியிருப்பு பகுதிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்த உங்களுக்கு பட்டா வழங்கி சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதியளித்துளார். இந்நிலையில் கடந்த வாரம் அரசு அதிகாரிகள் குறவன் காலனி பகுதிக்கு சென்று நீங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றி விட்டு அடுக்க மாடி குடியிருப்பு கட்டி தருவதாக வீடுகளை காலி செய்ய கூறி வீடுகளை இடிக்க ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர்.
இதற்கு குறவன் காலனி மக்கள் தாங்கள் இப்பகுதியில் 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம் வீடுகளை இடித்துவிட்டு அடுக்கமாடி கட்டி தரும் திட்டம் எங்களுக்கு வேண்டாம் பட்டா மட்டும் வழங்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் வீடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதால். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாதிக்கப்பட்ட மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் மனு அளித்தனர். தங்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்கும் முயற்சியை கைவிடவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேரும் போராட்டம் நடத்துவோம் என குறவன் காலனி மக்கள் தெரிவித்தனர்.
0
0