மனைவியை அடித்துக் கொன்ற காவல் உதவி ஆய்வாளர்: ரகசியமாக சடலத்தை எரிக்க முயற்சி

22 November 2020, 3:58 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனது மனைவியை அடித்துக் கொன்று ரகசியமாக சடலத்தை எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கார்மேகம். இவர் பொம்மிடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பேபி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் செய்த நாளிலிருந்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் தலையில் அடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளர். நேற்று மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பேபி மயக்கம் அடைந்துள்ளார்.

அதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிந்சைக்காக சேர்தனர். ஆனால் அரை பரிசோதித் மருத்துவர்கள் பேபி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தன் மனைவியின் உடலை அவசர அவசரமாக எரிக்க கார்மேகம் முயன்றதையடுத்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் உடலை எரிக்க விடாமல் தகறாறுவில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடனடியாக இடுகாட்டிற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் கார்மேகம் தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டதாகவும், பேபியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், கார்மேகத்தை கைது செய்யவேண்டும் என உயிரிழந்த பேபியின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து கார்மேகத்தை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். காவலரே யாருக்கும் தெரியாமல் உயிரிழந்த தனது மனைவின் உடலை எரிக்க முயற்சி செய்த சம்பவம் வெண்ணாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0