மக்காசோளம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

10 May 2021, 7:32 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே ஒடசல்பட்டி வனப்பகுதியின் வலைவில் மக்காசோளம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து குறித்து மதிகோன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாதனூர் புதூரை சேர்ந்த சுதாகர் மற்றும் ராஜா லாரி ஓட்டுநர்களான இருவரும் கர்நாடக மாநிலம் தாவணகரையிலிருந்து 30 டன் மக்காசோளம் பாரம் ஏற்றிக்கொண்டு பெருந்துறையை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது தருமபுரி அருகே உள்ள தங்களது சொந்த ஊரான தாதனூர் புதூருக்கு சென்று ஓய்வெடுத்து விட்டு பெருந்துறை செல்லலாம் என்று தருமபுரியில் இருந்து அரூர் சாலையில் லாரியை ஓட்டிக் கொண்டு சென்றனர். அப்போது ஒடசல்பட்டி கூட்டுரோடு அருகே உள்ள வனப்பகுதியில் வலைவில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அதிவேகமாக வலது புறம் ஏறி வர எதிரே வந்த லாரிக்கு இடையில்

இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ஆம்புலன்சை முந்தும் போது இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி டிரைவர் ராஜா அவருக்கு இடதுபுறம் லாரியை பாதையிலிருந்து சற்று இறக்கி ஓட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர்கள் சுதாகர் மற்றும் ராஜா காலில் அடிபட்டு லேசான காயங்களுடன் இரு ஓட்டுனர்களும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதிகோன்பாளையம் காவல் துறையினர் காயமடைந்த ஓட்டுனர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 38

0

0