தருமபுரியில் தக்காளி வரத்து அதிகரிப்பு: கால்நடைகளுக்கு உணவாகும் தக்காளி

15 April 2021, 5:59 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்தும், விலை குறைந்ததால் சாலையில் கொட்டி கால்நடைகளுக்கு உணவாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளியை விவசாயிகள் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான பெங்க;ரு, கேரளா மற்றும் சென்னை, ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால் மார்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்து 1 கிலோ தக்காளி 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரைக்கும், 25 கிலோ எடை கொண்ட 1 பெட்டி 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது. தொடர்ந்து விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால், மேலும் விலை கடுமையாக சரிந்து கிலோ 3 ரூபாயிக்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு மாதமாக விலை ஏற்றமில்லாமல், தொடர்ந்து சரிந்து வருவதால், தக்காளி அறுவடை செய்யும் கூலிக்கு கூட வருவாய் கிடைக்கவில்லை என, தக்காளியை விவசாயிகள் வனப்பகுதியில் சாலையோரம் கொட்டிவிட்டு செல்வதால், வனப்பகுதியில் உள்ள குரங்குகள் மற்றும் மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளுக்கு, மாடுகளுக்கும் உணவாகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி விலை ஏற்றம் காணாததால், விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

Views: - 11

0

0