பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்த அமைச்சர் கே.பி.அன்பழகன்

6 February 2021, 3:35 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 5.11 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் கும்பாரஅள்ளி, திண்டல், கன்னிப்பட்டி, சென்றாயனஅள்ளி, அடிலம் ஆகிய 5 இடங்களில் தலா ரூ.80 இலட்சம் வீதம் மொத்தம் ரூ 4 கோடி மதிப்பில் 5 சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் பணிக்கும், அதே போரில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சென்ராயனஅள்ளி, சொரக்கானூர், கெண்டிகானஅள்ளி, முக்குளம்,

சொன்னம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் என மொத்தம் ரூ.5 கோடியே 11 லட்சம் மதிப்பில் 10 வளர்ச்சி திட்டப் பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

Views: - 0

0

0