108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.பி. அன்பழகன்

23 November 2020, 2:58 pm
Quick Share

தருமபுரி: காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் தேவை என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதனையடுத்து காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 15

0

0