நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்: வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க பொமக்கள் கோரிக்கை

19 April 2021, 5:58 pm
Quick Share

தருமபுரி: அரூர் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனத்துறையினருக்கு பொமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் திருவிக நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் காடுகளில் உள்ள மரங்கள் இலைகள் காய்ந்துபோய் இலைகள் இல்லாமல் வெறும் கிளைகளாக மட்டுமே உள்ளது. இதனால் காட்டில் வாழும் குரங்குகளுக்கு உண்ண உணவின்றி மனிதர்கள் வாழும் குடியிருக்கும் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. அரூர் திருவிக நகரிலுள்ள குடியிருப்புகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக படையெடுத்த குரங்குகள் வீட்டின் மாடி மீது காயப்போட்டு இருக்கும் துணிகளை குரங்குகள் எடுத்துச் செல்வதும்,

அதேபோல வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் மீது ஏறி விளையாடுகிறது எனவும், குழந்தைகள் உள்ள பகுதிகளில் குரங்குகள் இருப்பதால் குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும் அதேபோல பெற்றோர்களுக்கு ஒருவித அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே அரூர் வனத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்க வேண்டுமென்றால் வனப்பகுதியில் காட்டில் வாழும் விலங்குகள் உட்கொள்ளும் வகையில் தண்ணீர், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Views: - 20

0

0