7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

1 March 2021, 2:38 pm
Quick Share

தருமபுரி: கொரோனா நோய்தொற்று காலத்தில் பணிபுரிந்த அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் முதலமைச்சர் அறிவித்த படி இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொழிலாளர் உதவி ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி காண்ட்ராக்ட் தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூபாய் 509.16 வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாகா கமிட்டி அமைத்து பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும், .கொரோனா நோய்தொற்று காலத்தில் பணி புரிந்த அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் தமிழக முதலமைச்சர் அறிவித்த படி இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தங்களை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாகவும் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய தர்மபுரி நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நகராட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறினர்.

Views: - 39

1

0