நண்பனை லாரி ஏற்றி கொலை செய்து நாடகமாடிய நான்கு பேர் கைது
4 February 2021, 9:21 pmதருமபுரி: தருமபுரியில் நண்பர் மூலம் லாரிக்கு பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுவதற்க்காக லாரி ஏற்றி கொலை செய்து விபத்து போன்று நாடகமாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பைபாஸ் சாலை அருகே கடந்த 1ம் தேதி அன்று வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் வாகனங்கள் தலை மற்றும் உடலின் மீது ஏறி நசுங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல்துறையினர் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வந்தனர். இதில், மர்மான முறையில் இறந்து கிடந்தவர், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சுண்ணாம்புகாரத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 42 என்பது தெரியவந்தது.
பின்னர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த அருள்குமார் என்பவர் தனியார் வங்கியில் கடன் பெற்று லாரிகள் வாங்கி பணம் கட்டாமல் ஏமாற்றியதால், அருள்குமார் தனது தந்தையிடம் பல ஆண்டுகளாக விசுவாசமாக வேலை செய்து வந்த சுரேஷ்குமார் மூலம் மீண்டும் தனியார் வங்கியில் கடன் பெற்று 6 லாரிகள் வாங்கி உள்ளார். சுரேஷ்குமார் மூலம் வாங்கிய லாரிகளின் கடனை கட்டாமல் ஏமாற்றுவதற்க்காக அருள்குமார் தனது நண்பர்களான எல்லப்பராஜ், கோவிந்தராஜ், கார்த்தி ஆகிய நான்கு பேரும் சுரேஷ்குமாருக்கு மதுவை ஊற்றி போதை ஏறிய பிறகு தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பைபாஸ் சாலையில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் போதையில் இருந்த சுரேஷ்குமாரை காரில் அழைத்து வந்து,
சாலையில் கீழே தள்ளி அவர் மீது மினி லாரியை ஏற்றி அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது போல் நாடமாகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷ்குமாரை வாகனம் ஏற்றி கொலை செய்த அருள்குமார் உள்ளிட்ட நான்கு பேரை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர். லாரிக்கு பெற்ற கடனுக்காக தனது தந்தையிடம் விசுவாசமாக இருந்த சுரேஷ்குமாரை நம்ப வைத்து நண்பர்கள் உதவியுடன் லாரி ஏற்றிக்கொலை செய்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0