போலிசான்றிதழ் கொடுத்து 19 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்த பெண்: காவல் நிலையத்தில் கல்வி அதிகாரிகள் புகார்

30 September 2020, 8:27 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே போலிசான்றிதழ் கொடுத்து 19 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்த பெண் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் வெங்கடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமணன். இவரது மனைவி கண்ணம்மாள். இவர் காரிமங்கலம் ஒன்றியம் மலைகிராமமான திம்மராயனஹள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2001 ஆண்டு தொடக்க பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2017 ஆண்டு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பள்ளி கல்வி இயக்குனரகத்தின் உத்தரவின் பேரில் தொடக்க பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவிட்டதின் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கபட்டது.

அதனடிப்படையில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் கண்ணாம்மாள் அவர்களின்10 மற்றும்12 வகுப்பு சான்றிதழ்கள் சரிபார்க்க பட்டது . அதில் 12 ஆம் வகுப்பில் தனிதேர்வராக தேர்வு எழுதியுள்ளார். அதில் 4 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார் அதாவது தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளார். ஆனால் தேர்ச்சி பெற்றதாக போலியான சர்டிபிகேட் கொடுத்து உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் தெரியவந்தது. இதனையடுத்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவின் பேரில் பாலகோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் திம்மராயணஹள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வரும் கண்ணம்மாள் மீது நடவடிக்கை எடுக்க காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதன் படி வட்டார கல்வி அலுவலர் உமாதேவி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட கண்ணம்மா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியை கண்ணம்மாள் தலைமறைவாக உள்ளார்.

Views: - 0

0

0