நடமாடும் பெண் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

By: Udayaraman
12 October 2020, 10:33 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், காவல்துறை சார்பில், பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் பெண்பாதுகாப்பு குழு வாகனத்தை சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் பிரதிப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தருமபுரியில் காவல்துறை சார்பில், மாவட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிமாக பதிவாகும் கிராமங்களுக்கு சென்று இக்குற்றங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், தகுந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவும், குழந்தை திருமணங்களை தடுக்கவும்,பெண் சிசுக்கொலைகளை தடுக்கவும், இக்குற்றங்களுக்கான சட்ட ரீதியிலான நிவாரணம் மற்றும் தண்டனைகள் பற்றியும், பல்வேறு சமூக மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றியும் மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் நடமாடும் பெண் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு வாகனத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் பிரதிப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெண் பாதுகாப்பு குழுவின் விழிப்புணர்வு வாகனத்தில், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 4 இதர பெண் காவலர்களுடன் இயங்கும். இந்தக் குழுவின் பயன்பாட்டிற்காகவும், பொதுமக்களிடம் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும் துவங்கப்பட்டது. மேலும் இந்த காவல் குழுவினை தொடர்பு கொள்ள தொடர்பு எண் 9585585154 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் தருமபுரி மாவட்ட உட்கோட்ட துணைகண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்,

Views: - 35

0

0