காவலர்களுக்கு வனப்பகுதியில் துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி

Author: Udhayakumar Raman
3 September 2021, 6:31 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பணியில் உள்ள காவலர்களுக்கு வனப்பகுதியில் துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர் காவல் உட்கோட்டங்களில் உள்ள பகுதிகளில் காவல் துறையில் பணியாற்றும் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பணிபுரியும் இடங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நினைவூட்டல் பயிற்சியை முடிக்க வேண்டும். அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சி கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இந்த பயிற்சியானது வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே உள்ள வனத் பகுதியில் காவல் துறையினர் துப்பாக்கிச்சுடும் நினைவூட்டல் பயிற்சி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நடைபெற்ற வருகிறது. பணியில் உள்ள இருபால் காவலர்கள் 1400 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கபட்டு அதில் தினந்தோறும் 100 முதல் 150 வரையிலான காவலர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கிச்சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறார். முன்னதாக கலந்து கொண்ட காவலர்களுக்கு இரத்த அழுத்தம், கண் பார்வை பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தபட்டது.இந்த நினைவூட்டல் பயிற்சியில் துப்பாக்கியை எவ்வாறு கையாள்வது, சுடுவதற்கு தயாராவது என்பது குறித்த பயிற்சியை வழங்கி வருகின்றனர்.

அதே போல் எந்த வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்ட விவரங்களும் காவலர்களுக்கு நினைவூட்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவலர்களுக்கும் 3 சுற்றுகள் என 15 தோட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு 9 எம்எம் பிஸ்டல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து காவலர்களுக்கு 303, 7.62 எம்எம் போர்டு ஆக்சன், இன்சாஸ் என காவலர்களுக்கு மூன்று ரக துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் 15 குண்டுகளில் எத்தனை குண்டுகள் இலக்கினை வெற்றிகரமாக அடைகின்றனர் என்பது குறித்தும், துப்பாக்கி சுடும் அவர்களே தங்களது இலக்கு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Views: - 319

0

0