பொங்கல் விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்

14 January 2021, 3:47 pm
Quick Share

தருமபுரி: கொரோனா தடுப்புப்பணிகளில் சேவையாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டி பரிசு வழங்கி, பொங்கல் திருவிழா கொண்டாடபட்டது.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம், தைத்திருநாள் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், இருளப்பட்டி ஊராட்சியில் இதுவரையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக சேவைப் பணிகள் ஆற்றிய தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை போற்றும் விதமாக பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இருளப்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், தலைவர் குமார் தலைமையில் பொங்கலிட்டு, படையல் வைத்து சூரிய பகவானை வணங்கினர்.

தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்காத இருந்து வரும், இருளப்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக சேவை பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் குமார் புத்தாடைகளையும், இனிப்புகளையும் வழங்கினார். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட இருளப்பட்டி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவாக இவ்வாண்டு நடைபெற்ற விழாவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கௌரவிக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பொங்கல் விழாவில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 5

0

0