தருமபுரி வழியாக கர்நாடகாவுக்கு கடத்தவிருந்த 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

5 November 2020, 5:47 pm
Quick Share

தருமபுரி: சேலத்தில் இருந்து தருமபுரி வழியாக கர்நாடகாவுக்கு கடத்தவிருந்த 20 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், சேலம், தருமபுரி வழியாக பெங்களூருவுக்கு லாரியில் சுமார் 20 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் தருமபுரி வருவாய்கோட்டாட்சியர் தணிகாசலம் தலைமையில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் சரவணன் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே லாரியை தடுத்து நிறுத்திய போது லாரியில் இருந்த இரண்டு ஓட்டுனர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

சந்தேகம் அடைந்த வருவாய்துறையினர் லாரியை சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடித்தனர். லாரியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபகழக கிடங்கில் ஒப்படைத்தனர். லாரியில் ரேசன் அரிசி கடத்திய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

Views: - 17

0

0