மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

Author: Udayaraman
24 July 2021, 6:56 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் மத்திய அரசு நிதி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அதியமான் கோட்டை வள்ளல் அதியமான் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் மற்றும் செயற்கை உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 855 மாற்றுத்திறனாளிகளுக்கு 73 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர வாகனம், நடைபயிற்சி சாதனம், சிறப்பு சக்கர நாற்காலி, மனவளர்ச்சி குன்றியோருக்கான கற்றல் உபகரணம், தொழுநோய் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உபகரணங்கள், நவீன காதொலி கருவி, செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்வி பயிலும் 445 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 21 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

Views: - 177

0

0